அரசியலால் ஓரங்கட்டப்பட்ட முன்னனி நடிகர்கள்!! படம் ஓடாததற்கு இது தான் முக்கிய காரணம்!!

0
20
Leading actors sidelined by politics!! This is the main reason why the film is not running!!
Leading actors sidelined by politics!! This is the main reason why the film is not running!!

சமீப காலமாக சூர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் திரையரங்குகளில் தாக்குப்பிடிக்க இல்லை. கடைசியா சூர்யா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடிய படம் என்றால் அது சூரரை போற்று மற்றும் ஜெய் பீம். ஆனால் இந்த ரெண்டு படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியானது. திரையில் சூர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை.

இதற்கு முக்கிய காரணம் சூர்யா ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து அண்மையில் பேசிவருவதும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிமுகவை வாய்க்கு வந்த படி பேசியதும், தற்போது திமுக ஆட்சி காலத்தில் வாயே திறக்காமல் திமுகவை ஆதரிப்பதை போல நடந்து கொள்வது தான் காரணம் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

அதேநேரத்தில் எல்லாரும் ட்ரோல் செய்யும் அளவுக்கு சூர்யா படங்கள் ரொம்ப மோசம் எல்லாம் இல்ல, கோவில் கட்டும் பணத்தில் பள்ளிக்கூடம் கட்ட சொன்னாங்கள்ல, அதனால அவங்க படத்தை OTTயில் பார்த்துக்கொள்ளலாம் என மக்கள் முடிவெடுத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோல கமலஹாசன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த Thug Life படமும் ஓன்னும் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை. கமல் கட்சி தொடங்கியது தான் பிரச்சனை என்றால் மக்கள் விக்ரம் படத்தையே புறக்கணித்திருப்பார்கள்.

விஷயம் வேற, கமல் திமுக கூட்டணிக்கு வந்தவுடன் ராஜ்யசபா MP பதவி பெற்ற பிறகு தான் Thug Life படத்திற்கு இத்தனை எதிர்ப்புகள் வந்துள்ளது. அதேபோல படத்தின் தயாரிப்பாளர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். திமுக எதிர்ப்பு தான் இந்த படங்களை ரசிகர்கள், மக்கள் திரையில் பார்க்காமல் புறக்கணிப்பதற்கு காரணம் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

Previous article1000 வாங்க வேண்டுமா.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதிங்க!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
Next articleஎனக்கும் ரைடுக்கும் சம்பந்தம் இல்லை!! எனக்கும் விஜய்க்கும் அறிமுகமானது இப்படி தான்! அருண் ராஜ் ஓபன் talk!