டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0
191

டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு கூட ஒரு வழிமுறையை வகுத்து வைத்தனர்.நம் இந்திய கலாச்சாரத்தில் தரையில் அமர்ந்து,சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது.தற்போதும் சில வீடுகளில் இருந்து வருகின்றது.

நாகரிக வளர்ச்சியினால் பல வீடுகளில் டைனிங் டேபிள் வந்து விட்டதாலும்,வெளிநாட்டு உணவு முறைக்கு மாறிக் கொண்டு இருப்பதினாலும்,தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதை நாம் மறந்து விட்டோம்.

ஆனால் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதினால் மற்றும் நின்றுகொண்டு சாப்பிட்டால் நம் உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.நின்றுகொண்டு சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

* செரிமான கோளாறு பிரச்சனையை ஏற்படுத்தும்.நீங்கள் உணவு உண்ணும் நிலையைப் பொறுத்தும் உங்கள் செரிமானம் இருக்கும்.நாம் நின்று கொண்டு சாப்பிடும் பொழுது உணவு,செரிமான மண்டலத்திற்குள் நேரடியாக வேகமாக செல்லும்.இதனால் உணவு நுண்துகளாக உடைக்க படுவது தடுக்கப்பட்டு,
உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி செரிமானத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

*நின்றுகொண்டு சாப்பிடுவதினால் நாம் சாப்பிடும் அளவு நமக்கு தெரியாமல் அதிக அளவில் உணவை உட்கொள்ளவோம்.இதனால் விரைவில் உடல் பருமன் அதிகரிக்க காரணமகின்றது.எனவேதான் நாம் அமர்ந்து நிதானமாக நன்றாக மென்று சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*மருத்துவ ரீதியாக நாம் நின்று கொண்டு சாப்பிடும்போது,உட்கார்ந்து சாப்பிடுவதைவிட 30% செரிமானத்தின் வேகம் அதிகரிக்கும்.

உடலில் வேகமான செரிமானம் என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் உணவில் உள்ள சத்துகள் முழுமையாக உட்கிரைக்கப்படுவதற்கு முன்பே உணவு செரித்து விடுவதால், எஞ்சி இருக்கும் சத்துக்கள் நம் உடலில் வாயுவாக மாறி தங்கிவிடுகின்றது.இதனால் குடல் சம்பந்தமான வயிற்றுப் பிரச்சனைகள் ஏராளமாக ஏற்படும்.

*இது மட்டுமின்றி நாம் நின்றுகொண்டு  சாப்பிடும்பொழுது நம் மூளை நம் வயிற்றுக்கு போதுமான உணவை எடுத்துக்கொண்டோம் என்பதனை உணர்த்துவதை தடுக்கின்றது.

மேலே கூறிய அனைத்து பிரச்சனைகளும் நாம் உட்கார்ந்து சாப்பிடும் முறையால் சரிசெய்துவிட முடியும்.நாம் தரையில் அமர்ந்து சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடும் பொழுது நம் உடலில் செரிமானம் சீராக இருக்கும்.இதனால் மேலே கூறிய அனைத்து பிரச்சினைகளும் சரி செய்ய வழிவகுக்கும்.எனவே நம் பாரம்பரிய உணவு முறையை பின்பற்றி நாமும்,நம்முடைய சந்ததியும் வளமுடன் வாழ வழிவகுப்போம்.நோயற்ற சமூகத்தை உருவாக்க முயற்சிப்போம்.

(நின்றுகொண்டு சாப்பிடுவதும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதும் ஒரே விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

Previous articleஒரே ஒரு கொய்யாப்பழத்தை நாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleஉச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க!