மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பா? சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்து மக்களை பாதித்து வருகிறது. முதல் அலையில் அதிகளவு உயிர்சேதம் நடைபெறவில்லை.மேலும் அரசாங்கம் முன்கூட்டியே ஊரடங்கு அமல் படுத்தியதால் தொற்றின் பாதிப்பும் குறைந்தே காணப்பட்டது.இரண்டாம் அலையில் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் எந்தவித கட்டுப்பாடுகளையும் மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இரண்டாம் அலையில்தான் உயிர் சேதமும் அதிகளவு நடைபெற்றது.அப்பொழுது செயல்பட்டு வந்த அரசாங்கம் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை. அவ்வாறு முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் வேலையிலேயே லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.
இரண்டாம் கட்ட அலையின் முடிவில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. அப்பொழுது முதல் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதனையடுத்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து 18 வயது மேற்ப்பட்டவருக்கும் தடுப்பூசியை செலுத்தினர். முதலில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாக காணப்பட்டது. தடுப்பூசியும் போதுமான அளவிற்கு கைவசம் இல்லாமல் இருந்தது.நாளடைவில் மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு விவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிடும்.அவ்வாறு வெளியிடுகையில் 11 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு இந்தியாவில் அதிகளவு தொற்று பாதிப்படைவதாக கூறியுள்ளனர்.அந்த வயது உடையவர்களுக்கு தற்போதுதான் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.அங்கு மாணவர்கள் ஒன்று கூடும் சூழலாலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி பெண்ளுக்கும் அதிக அளவு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளனர்.
நேற்று மட்டும் கொரோனா தொற்றால் 26 ஆயிரத்து 257 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதில் 277 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 14-வது நாளாக 30 ஆயிரத்துக்குள்ளேயே இருந்து வருகிறது.சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி தொற்று பாதிப்பு 19 வயது உள்ளவர்களுக்கு அதிக அளவு பரவ நேர்ந்தால் அரசாங்கம் மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கும் என்று கூறுகின்றனர்.