கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு

Photo of author

By Anand

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.மேலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிக அளவில் கொரோனா  தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து அரசு துறைகளையும் இணைத்து தடுப்பூசி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்ததாக வீடு வீடாக சென்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வடக்கு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின்தங்கியே உள்ளன. இதனையடுத்து எண்ணிக்கையை அதிகரிக்க தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கென பரிசுகள், பொருட்கள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு எல்.இ.டி கலர் டிவி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது வரும் அக்டோபர் 10 ஆம் தேதி அங்கு நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் ஊசிபோட்டுக்கொள்ளும் நபர்களில் மூன்று நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 40 இன்ச் எல்.இ.டி கலர் டிவி வழங்கவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூன்று டிவிகளும் நன்கொடையாக வாங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா கூறியதாவது, ”இந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் மூன்று  நபர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு இந்த டிவி பரிசாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்..