பாபா செய்த லீலை! பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
ராஜஸ்தானில் பாபா சன்யாசி என்பவரால் தொடங்கப்பட்ட முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது.இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை யடுத்த பங்கரோட்டா என்ற இடத்தில் உள்ளது.
இந்த இடத்திற்கு தினமும் 100 பேர் வந்து செல்வது வாடிக்கையான நிலையில், அந்த ஆஸ்ரமம், தற்போது பாபாவின் மகனான யோகிராம் மேத்தாவினால் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் யோகிராம் மீது ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் 25 வருடங்களாக ஒரு பெண் அந்த ஆசிரமத்திற்கு வந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பெண்ணிற்கு கடவுளின் பிரசாதம் என கூறி கஞ்சா கலந்த இனிப்புகளை வழங்கி யோகேந்திர மேத்தா அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் அவர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதே போல் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.இந்த புகாரின் காரணமாக தலைமறைவாகி உள்ள பாபாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.