டாய்லெட்டில் வீசும் கடும் வாடையை கட்டுப்படுத்தி மணக்க செய்யும் எலுமிச்சை தோல்!!

Photo of author

By Divya

டாய்லெட்டில் வீசும் கடும் வாடையை கட்டுப்படுத்தி மணக்க செய்யும் எலுமிச்சை தோல்!!

Divya

உங்கள் டாய்லெட்டில் இருந்து கெட்ட வாடை வீசுகிறதா.கவலையை விட்டு தள்ளுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை வைத்து உங்கள் டாய்லெட் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை தோல்
2)பேக்கிங் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.இதை பேக்கிங் சோடாவில் போட்டு கலக்க வேண்டும்.

பின்னர் இதை டாய்லெட்டில் ஊற்றி பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் டாய்லெட் அழுக்குகள் முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வினிகர்
2)எலுமிச்சை சாறு
3)கல் உப்பு
4)பேக்கிங் சோடா

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி கல் உப்பு மற்றும் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்குங்கள்.இதை பிளாஸ்டிக் பாக்கெட்டில் தண்ணீரில் ஊற்றி மிக்ஸ் செய்யுங்கள்.

அதன் பிறகு டாய்லெட்டில் இதை ஊற்றி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.அடுத்து பிரஷ் வைத்து க்ளீன் செய்யுங்கள்.இவ்வாறு செய்தால் டாய்லெட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலைகள்
2)ஷாம்பு
3)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு புதினா இலை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு பாக்கெட் ஷாம்பு ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள்.இதை டாய்லெட்டில் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.

அதன் பிறகு பிரஷ் கொண்டு டாய்லெட்டை தேய்த்து சுத்தப்படுத்துங்கள்.இப்படி செய்தால் டாய்லெட் துர்நாற்றம் முழுமையாக அகலும்.