லியோ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார்!! லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் ஷாக்!!

Photo of author

By CineDesk

லியோ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார்!! லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் ஷாக்!!

CineDesk

Leo also has Vijay Sethupathi!! Lokesh Kanagaraj gives a shock!!

லியோ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார்!! லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் ஷாக்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி படங்களே. மாஸ்டர் மற்றும் விக்ரம் இரண்டு படங்களும் வேற லெவலில் இருந்தது. தற்போது மீண்டும் நடிகர் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை பற்றி வரும் அப்டேட்கள் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த இரு படங்களிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். லியோ படத்திலும் இவர் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பாக கூட லியோ படபிடிப்பு தளத்தில், திரைக்கதை ஆசிரியர் ஒருவர், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்து வரும் கண்ணாடியை போட்டோ எடுத்து சமுக வலைத்தளத்தில் போட்டு இருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்களும் விஜய் சேதுபதி நடிப்பார் என பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் சேதுபதி, தான் லியோ படத்தில் நடிக்கவில்லை என்றும், எதற்காக அந்த திரைக்கதை ஆசிரியர் இப்படி செய்து இருக்கிறார் என தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் நடிக்க வில்லை. அதற்கு பதிலாக விஜய் இடம்பெறும் காட்சிகளில் பின்னணி குரல் கொடுக்க உள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் படம் கமல்ஹாசன் குரலில் ஆரம்பிக்கும், அது போல விஜய்காக, விஜய் சேதுபதியின் குரல் லியோ படத்தில் இடம்பெறுகிறது.