திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!

Photo of author

By Sakthi

திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!

 

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை லியோ படக்குழு எதிர்பாராத நேரத்தில் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, பிக்பாஸ் ஜனணி, பிக்பாஸ் அபிராமி, அர்ஜூன், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர்.

 

ராக்ஸ்டார் அனிருத் லியோ படத்திற்கு இசையமைக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

 

லியோ திரைப்படம் இந்த வருடம்(2023) அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையால் லியோ திரைப்படத்தை பற்றி பல தகவல்கள் பரவி வருகின்றது. அந்த தகவல்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நேற்று(ஜூன் 16) லியோ படக்குழு முக்கியமான தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

அந்த அறிவிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் முதல் பாடல் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இந்த பாட்டுக்கு “நா ரெடி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில்  பொழக்கட்டும் பறை பாட்டு, போனா போகட்டும் பாட்டு, விக்ரம் திரைப்படத்தில் டைட்டில் டிராக் பாட்டு, போர்கண்ட சிங்கம் பாட்டு ஆகிய பாட்டுகளை எழுதிய விஷ்ணு எடவன் அவர்கள்தான் லியோ திரைப்படத்தின் நா ரெடி பாட்டையும் எழுதியுள்ளார்.

 

அனிருத் இசையில் உருவ்கி இருக்கும் இந்த பாட்டை நடிகர் விஜய் அவர்கள் பாடியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. எது எப்படியோ லியோ திரைப்படத்தின் முதல் பாட்டுக்கான அறிவிப்பு போஸ்டரை பார்க்கும் பொழுது நா ரெடி பாட்டு சிறப்பாக வரப்போகிறது என்று தெரிகிறது. இது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அவர் அடுத்து நடிக்கும் 68வது படமான தளபதி68 படத்தை பற்றியும் தகவல்ஙள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.