கைதி 2 படத்துடன் இணையும் லியோ… இரண்டாவது பார்ட் ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டம்!!

0
35

கைதி 2 படத்துடன் இணையும் லியோ… இரண்டாவது பார்ட் ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டம்…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தற்பொழுது இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ ஆகும். லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

லியோ திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் லியோ திரைப்படத்தை தயாரித்துள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் லியோ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கைதி படத்தின் 2ம் பாகத்தோடு அதாவது கைதி2 படத்துடன் இணைத்து வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மீண்டும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக லியோ படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.