இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு!!

0
32

 

இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு…

 

இத்தாலி நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஏட்ரியன் வாகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் என்ற நிறுவனம் இங்கிலாந்து நாட்டை மையமாக வைத்து செயல்படும் ஒரு பதிப்பக நிறுவனம் ஆகும். ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனம் கதை மற்றும் கதை இல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிட்டு வருகின்றது.

 

ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல இடங்களில் உள்ளது. இந்தியாவிலும் ப்ளூம்ஸ்பரி நிறுவனத்தின் கிளை பதிப்பகம் உள்ளது.

 

மேலும் அமெரிக்காவிலும் ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனத்தின் கிளை உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ளூம்ஸ்பரி பபள்சிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 45 வயதான ஏட்ரியன் வாகன் என்ற பெண் பணியாற்றி வந்தார்.

 

ஏட்ரியன் வாகன் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இத்தாலி நாட்டின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலா சென்றிருந்த பொழுது கடலில் அவருடைய குடும்பத்தினருடன் ஒரு வாடகை மிதவேகக் கப்பலில் பயணித்தார்.

 

எதிராக சுமார் 80 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பெரிய சுற்றுலா படகு வந்து கொண்டிருந்தது. அப்பெழுது ஏட்ரியன் வாகன் சென்ற வேகக்கப்பல் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பெரிய கப்பல் மீது மோதியது. பெரிய கப்பல் மீது ஏட்ரியன் சென்ற கப்பல் மோதியதில் ஏட்ரியன் வாகன் கடலில் தூக்கி வீசப்பட்டார்.

 

படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட பொழுது பெரிய கப்பலின் புரொப்பெல்லர் மீது மோதியதில் ஏட்ரியன் வாகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக கடலில் இருந்து மீட்கப்பட்ட ஏட்ரியன் வாகன் சிகிச்சை பெறுவதற்கு அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவக் குழு வந்து ஏட்ரியன் வகான் அவர்களை பரிசோதித்த பொழுது ஏட்ரியன் வாகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவக் குழு தெரிவித்தது.

 

இந்த விபத்தில் ஏட்ரியன் வாகன் அவர்களின் கணவர்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

 

இத்தாலி நாட்டின் புலனாய்வுத் துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.