சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
67
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சம ஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். நிதி உங்களுக்கு அனுகூலமாக உள்ளது.

கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் மூலம் அது சரியாகும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் அருமையாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைவதால் சில புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் அது அற்புதமான பாதையில் செல்லும்.

உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

author avatar
Selvarani