கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக நடைபெறும் நாள்!

0
53
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக நடைபெறும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு எந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக நடைபெறும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரியவரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு காலதாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச்சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் வந்து சேரும்.

அரசியல்வாதிகள் அமைதியாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக மாற்று மருத்துவமான ஹோமியோபதி ஆயுர்வேதத்தை மேற்கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani