சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

0
181
Leo – Today's Horoscope!! Happy day!
Leo – Today's Horoscope!! Happy day!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற்று சந்தோஷம் பெறுவீர்கள்.

நிதி அற்புதமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். கணவன் மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழுங்கள்.

கொடுக்கல் வாங்கல்கள் அருமையாக செல்வதால் புதிய முதல்களை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சந்தோஷமான நேரம். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதை கண்டு மனமகிழ்ந்து போவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் கைகூடும் நாள்!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here