சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வெற்றி அடையும் நாள்!

Photo of author

By CineDesk

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வெற்றி அடையும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வெற்றி அடையும் நாள். நிதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பது உங்கள் மனதிற்கு ஆறுதலை அளிக்கும்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்கும் சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி நுணுக்கமான சில திட்டங்களை புகுத்தி முன்னேறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பாக அமையும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்கள் திரைப்பட வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடன் பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். அவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகள் குறையலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயார் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.