சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

0
183

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

சிம்மராசி அன்பர்களை ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள். நிதி நிலைமை ஓரளவுக்கு அனுகூலமாக இருந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சிலருக்கு பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்திச் செய்யும் எண்ணம் மேலோங்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து திரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபுதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!!
Next articleகன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here