புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!!

0
432

புதினா இலைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் சிகரெட் குடிபதினால் அவர்களின் உதடுகள் கருமையாக காணப்படும். அதனை சரி செய்ய பீட்ரூட் சாறு, புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும்.

மேலும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை பொடி செய்து அதில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று காணப்படும்.வெதுவெதுப்பான நீரில் துளசி மற்றும் புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.

புதினா இலைகளை அரைத்து அதனை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் குளித்து வந்தால் முகம் மற்றும் மேனி கருமை நிறம் மறைந்து பளபளப்பாகும்.புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

மேலும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக புதினா சாற்றினை எடுத்து அதில் சம அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து பச்சை பயிறு மாவு சேர்த்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு ஐஸ் கட்டி வைத்து எடுத்தால் முகம் பளபளக்கும்.

சிறிது புதினாவுடன் தயிர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவினால் முகத்திலுள்ள கருப்புத் திட்டுகள் மறையும்.

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள்!!
Next articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here