சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகமும் குழப்பமும் உண்டாகும் நாள்!!

0
92

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகமும் குழப்பமும் உண்டாகும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் உற்சாகமாகவும் பிற்பகலுக்குமேல் சிறு குழப்பமும் உண்டாகும் நாள். காலையில் தைரிய ஸ்தானமாகிய சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். வருமானம் ஒரு அளவிற்கும் அணுகலமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரம் அதிரடி திருப்பங்களுடன் இருக்கும்.

குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசியல் இருக்கும் நண்பர்கள் தைரியமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றியை காண்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மூலம் சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அருமையாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய‌ தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.