நமது தமிழகத்தில் மட்டும் கோவில் போன்ற பொது இடங்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள் வருகை புரிகிறார்கள் என்றால் மட்டும் அங்கு முன்னேற்பாடுகள் தடபுடலாக இருக்கும். அதே நேரம் அவர்கள் வருகையால் அங்கு பாதிக்கப்படும் மக்களும் உள்ளனர். குறிப்பாக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் அங்கு இருக்கும் கடைவீதிகள் என தொடங்கி கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள் வரை அனைவருக்கும் சிரமம் தான்.
இதனை வாய் திறந்து சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றைக்கும் இல்லாத அளவிற்கு தார் சாலைகள் உட்பட அனைத்தையும் அன்றைக்கு மட்டும் மிகவும் சுத்தமாக பராமரிப்பதோடு கோவில் சுற்றுவட்டாரங்கள் அனைத்திலும் தங்களது கவனத்தை செலுத்துவர். அந்தப் பெரிய ஜாம்பவான்கள் கிளம்புவதற்குள் அங்கிருக்கும் மக்கள் இன்னும் எண்ணற்ற துன்பத்திற்கு ஆளாகுவார்கள் என்பதை யாராலும் விவரித்து கூற முடியாது. அந்த வகையில் நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வர உள்ளார்.
https://x.com/PttvNewsX/status/1962801411433078794
இவர் வருகையையொட்டி கோவில் முழுவதும் சுத்தம் செய்வதை விட்டுவிட்டு, அங்கு இருக்கும் யாசகம் வாங்குபவர்கள் வயதானவர்கள் என அனைவரையும் அப்புற படுத்தும் முயற்சியில் காவலாளிகள் இறங்கி உள்ளனர். அதாவது கோவிலை விட்டு அடாவடியாக வெளியேற்றி வருகின்றனர். அதிலும் ஒரு சில போலீசார் தங்களின் பூட்ஸ் கால்களால் ஒரு பெரியவரை எட்டி உதைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இது ரீதியாக பொதுமக்கள் கொந்தளிப்பில் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.