ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி!

0
133

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கண்காணிப்பு, ஊழல் தடுப்பு மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் ஊழலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ஊழல், பயங்கரவாத செயல், பொருளாதாரக் குற்றம், அனைத்தும் பண மோசடி, ஊழல் காரணமாகவே நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி ஊழல் என்பது தலைமுறை தலைமுறையாக நடந்ததால் நாடே வெறுமையாக்கி கிடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஊழல் சகாப்தமே இத்துடன் முடிவடைந்துவிட்டது என்று நம்பிக்கையாக கூறியுள்ளார். 

மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அவரவர் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாக செலுத்த படுவதினால் ஊழல் தற்போது குறைந்துள்ளது என்றார். இச்செயலால் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Previous articleதேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க…! குஷ்பு கிண்டல்…!
Next articleநடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!