ஆரம்பிக்கலாங்களா!! ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 5!!

Photo of author

By CineDesk

ஆரம்பிக்கலாங்களா!! ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 5!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களால் அதிகம் பேசப்பட்டு வரும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில். பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. மேலும் இது ஒரு உண்மை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந்து நாட்டில் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தை பின்பற்றுகிறது. மேலும் இதுவரை விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்கு பருவங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருமளவில் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நான்கு பருவத்திற்கும் நடிகர் திலகம் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து இதன் நான்காவது பருவம் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை விடாது துரத்தி வரும் கொரோனா பெரும் தொற்று காரணமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாக சற்று தாமதமாகி அக்டோபர் மாதம் ஒளிபரப்பானது. மேலும் இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஒரே வீட்டில் 100 நாட்கள் பல வித போட்டிகளில் ஈடுபட்டு கடைசியில் இருக்கும் ஒருவர் தான் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 1 இல் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார், சீசன் 2இல் நடிகை ரித்திகா வெற்றி பெற்றார், சீசன் 3இல் பாடகர் முகேன் ராவ் வெற்றிபெற்றார், சீசன் 4இல் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். மேலும் சீசன் 4 முடிந்த உடனே சீசன் 5 பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் இருந்தது.

மேலும் சீசன் 5 பற்றிய பேச்சு வார்த்தையும் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சீசன் 5 பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 5 க்கான லோகோ தற்போது தயாராகியுள்ள தாம். மேலும் அதை பற்றிய தகவல் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொலைக்காட்சி பக்கமிருந்து உறுதியாக வரும் என்று கூறுகின்றனர். மேலும் பிக் பாஸ் சீசன் 5 பல புது முகங்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.