நாங்க வேற மாரி!! இணையதளத்தில் வைரலாகும் வலிமை பாடல்!! இதுவரை படைத்திராத சாதனை!!

0
67
Let's go somewhere else !! The strength song that goes viral on the internet !! Unprecedented achievement !!
Let's go somewhere else !! The strength song that goes viral on the internet !! Unprecedented achievement !!

நாங்க வேற மாரி!! இணையதளத்தில் வைரலாகும் வலிமை பாடல்!! இதுவரை படைத்திராத சாதனை!!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரை அவரின் ரசிகர்கள் தல என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தமிழில் 55 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் பொழுது அவரின் ரசிகர்கள் அதைத் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்த நிலையில் தலையின் 60 வது படமான வலிமை திரைப்படம் படம் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஸ்கெட்ச் வினோத் இயக்குகிறார் போனி கபூர் தயாரிக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் இப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதனால் தல ரசிகர்களை பெரும் சோகத்தில் இருந்தனர். இதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி தமிழ் சினிமா திரையுலகமே எதிர்பார்த்த வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மிகவும் பிரம்மாண்டமாக இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட பனியில் உள்ளது. மேலும் இப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணிக்கு வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்த பாட்டை சோனி மியூசிக் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது.

மேலும் இந்த பாட்டை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் வரி எழுதியுள்ளார். இந்த பாட்டு நாங்க வேற மாதிரி என்று வேற லெவலில் இருந்தது. இதை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த பாட்டு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்பாடலை நேற்று நேரடியாக 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருந்தனர். இது இந்திய அளவில் எந்த ஒரு பாடலும் படைத்திராத சாதனை ஆக மாறியது. தற்பொழுது இந்தப்பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் 830k லைக்குகளை பெற்று இந்திய அளவில் 1 ON ட்ரெண்டிங்கில் உள்ளது.

author avatar
CineDesk