விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எங்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர் சமீபத்தில் அளித்த பேட்டி
திருமாவளவனை முதல்வர் ஆக்குவதே எங்கள் நோக்கம் என கூறியிருந்தார்.இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அளித்த பேட்டி ஒன்றில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை முதல்வர் ஆக்கும் உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது. சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திருவாவளவனுக்கு எந்த அருகதையும் இல்லை, மேலும் அருந்ததியர் மக்களின் ஒதுக்கீடு எதிராக வழக்கு தொடர்ந்த அவர் எப்படி பட்டியலின மக்களுக்கு தலைவராக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாங்கள் திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை வரவேற்கிறோம். அதற்கான தகுதி அவரிடம் உண்டு. அவர் முதல்வரானால் ஒரு தமிழனாக பெருமையும் மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது, எல் முருகன் அமைச்சராகலாம் ஆனால் திருமாவளவன் முதல்வர் ஆகக்கூடாதா? என கேள்வி எழுப்பினார். இடஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிப்போம் ஆனால் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். நாங்கள் எப்பாடுபட்டாவது திருமாவளவனை முதல்வராக்குவோம் என தெரிவித்தார்.