அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

0
303

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

பட்டியல் இன மக்களுக்கு எதிரான கட்சி பாமக என்று பொதுவாக பேசிவரும் நிலையில் ,அகில இந்திய பட்டியல் இன பேரவை சார்பாக பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக முதல்வருக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரங்களில் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை 5 கட்டங்களாக பாமகவும் மற்றும் வன்னியர் அமைப்புகளும் சேர்ந்து போராடிக்கொண்டு வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே நாடார் சங்கங்கள் அருந்ததியர் அமைப்புகள் ஆதரவு அளித்து வந்தன. அதேபோல் புதிய தமிழகம் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது பாமகவின் ஆறாவது கட்டம் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உள் இட ஒதுக்கீடு கேட்டு தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தினார்கள் .இந்த போராட்டத்தில் எப்பொழுதும் இல்லாத அளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் .மேலும் இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி திமுக அதிமுக தேமுதிக கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் வியப்படையச் செய்தது.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய பட்டியல் இன எழுச்சி பேரவையின் மாநில துணைத் தலைவர் வீ. மாரியப்பன் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

 

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவர் ராமதாசின் அழுத்தத்தின் பேரில் தான் கிடைத்தது, இப்போது வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கோரி அறவழியில் டாக்டர் . இராமதாஸ் அவர்கள் போராடி வருவது நியமாகவும் , நேர்மையாகவும் தெரியவருகிறது . வன்னியர்களின் அதிகம்பேர் வருமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் இது மறுக்கமுடியாத உண்மை . வன்னியர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி உதவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை தங்களின் மேலான பார்வைக்கு பணிவுடன் சமர்பிக்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக அரசு வன்னியர்களின் கோரிக்கையை கண்டுக்காமல் நிராகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வன்னியர் சமுதாயத்துக்கு 20% சதவீதத்தில் கிடைக்கும் பிரதிநிதித்துவம் 3.5% மட்டும் தான்,
எதுவுமே செய்யாத 4 சாதிகளுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 8 %
இது எவ்வளவு பெரிய அநியாயம்.அதனால் தான் வன்னியர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு தருமாறு கேட்டு போராடி வருகிறோம் என்கிறார்கள் பாமகவினர்.

பாமகவிற்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Previous articleதேமுதிகவை கழட்டி விட நினைக்கும் அதிமுக என்ன செய்யலாம்! இன்று முக்கிய முடிவு எடுக்கும் விஜயகாந்த்!
Next articleதேர்தலில் அரசியல் லாபத்திற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது! ஸ்டாலின் குற்றச்சாட்டு!