அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்!

Photo of author

By Parthipan K

அனைத்து மாநில, பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொரோனா கட்டுபாடுகள் குறித்து கடிதம்!

உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது, கட்டுக்குள் வந்து கொண்டிருந்த வேளையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கொரோனாவின் உருமாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொரோனாவின் உருமாற்றம் அடைந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்தில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதனை தொடர்ந்து உலகின் பல நாடுகளில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்தது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

எனவே, தொற்றின் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள தொற்றின் பரவலை பொறுத்து கட்டுபாடுகள் விதித்து வந்தன. இந்நிலையில் மத்திய அரசும் அவ்வப்போது, தொற்றின் பாதிப்பு குறித்தும், அதை கட்டுபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

அதனடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுபாடுகளில் அந்தந்த மாநிலங்கள் தளர்வு அளிக்கவும் அல்லது கூடுதல் கட்டுபாடுகளை விலக்கிக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் உள்துறைச்செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்,

உள்ளூர் நிலைமையை கவனமாக ஆராய்ந்து, சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், திருவிழா தொடர்பான கூட்டம் கூடுதல், இரவு நேர ஊரடங்கு, பொது போக்குவரத்து இயக்குதல், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவுவிடுதிகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் திறப்பு ஆகியவற்றில் தளர்வுகளை வழங்குங்கள் என தெரிவிக்கப்படுள்ளது. மேலும், முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.