அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை'”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!

Photo of author

By Savitha

அதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை'”..
வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!

அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறையை விடுதலை படத்தில் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளதாக இயக்குநர் வெற்றிமாறனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்றாக விவரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், மக்களை அமைப்பாக்குவதும், அரசியல்படுத்துவதும் இன்றியமையாத தேவை என்பதை வெற்றிமாறன் உணர்த்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.