துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
162
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோசமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் பாச மழை பொழிவார்கள்.

வருமானம் ஓரளவிற்கு திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தேகம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தப்படுத்தும்.

மூத்த வயதில் உள்ள அன்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மனதில் மகிழ்ச்சியோடு இருக்கும் சூழ்நிலை அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!
Next articleபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்! இந்தப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்!