துலாம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

துலாம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள். சந்திர பகவான் சுப ஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவுகள் மூலம் சில அனுகூலமான தகவல் ஒன்று தொலைபேசி மூலம் வந்து சேரும்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

 

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வித இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சிறு தூர பயணங்கள் மூலம் நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

 

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர் பாராத ஒரு வருமானம் வந்து சேரலாம்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.