துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

Photo of author

By Selvarani

துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். குடும்ப உறவு பலமாக காணப்படும். கணவன் மனைவியுடைய அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாகவும் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் அனுசரித்துச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பொருளாதார நிலை உயர்வதால் சொத்து சேர்க்கை உண்டாக்கலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.