துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

0
143
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் தடை தாமதங்கள் உண்டாகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது அவசியம். உடல் ஆரோக்கியம் சிகராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று காலதாமதம் உண்டாகலாம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு முயற்சியிலும் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani