தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்திலேயே ஆட்டோ டிரைவராக சிறு தோற்றத்தில் நடித்திருந்தார் பிரதீப். பின்னர் லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அந்த படத்தையும் இயக்கினார்.
AGS நிறுவனம் மிகக்குறுகிய பட்ஜெட்டில் லவ் டுடே படத்தை தயாரித்தது. படம் இன்றைய 2K கிட்ஸ் காதல் வாழ்க்கையை பிரதிபலிப்பதை போல இருந்ததால் மாபெரும் வெற்றி பெற்றது. வெறும் 5 கோடிக்கு தயாரிக்கப்பட்ட இந்த படம் 90 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பின்னர் AGS நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். இந்த படம் வெறும் 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 130 கோடி வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பிரதீப் ரங்கநாதன் DUDE படத்தில் நடித்து வருகிறார்.
மைத்திரி பிலிம்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருப்பதால் இந்த படத்தை OTT நிறுவனமான Netflix 25 கோடிக்கு வாங்கியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர்.