சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சோனாலி என்பவர் கரூரில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016 ஆம் வருடம் படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆதியநேந்தல் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் சோனாலியை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய காதலை சோனாவிடம் அவர் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது, அதற்கு சோனாலி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், உதயகுமாரை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கியிருக்கிறது எந்த சூழ்நிலையில், கடந்த 2016ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி உதயகுமார் கல்லூரிக்கும் சென்று சோதனை உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த சூழ்நிலையில், நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கியிருக்கிறார் .
அதாவது 5 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது அதனடிப்படையில் உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. மேலும் இந்த தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
குற்றவாளியிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத்தை இறந்த கல்லூரி மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் அவர் கூறியிருக்கிறார்.