திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை!
தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.அதன் பிறகு 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைப்பெறும்.
ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் இருப்பார்கள்.ஆனால் இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி அளிக்கவில்லை.அதனால் திருச்செந்தூர்முருகன் கோவிலில் உள்ள பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் ,ஜெ சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் திருச்செந்தூர் ,பழனி ,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ,ராமேஸ்வரம் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருப்தி கோவிலில் இருக்கின்ற கட்டுபாடுகளை போல கொண்டு வர வேண்டும்.
மேலும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் யாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது.யாகங்கள் கோவிலின் வெளியே மட்டுமே நடைபெற வேண்டும்.தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறினார்கள்.
மேலும் இந்த மனு தொடர்பாக திருச்செந்தூர் முருகன் கோவில் இணை ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்தது.மேலும் உள்ள விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.