இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

0
153

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக மழை பெய்து வருகிறது.

மேலும் நேற்று இரவு பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்.

கோவை,நீலகிரி,தேனி,நாமக்கல்,சேலம், பெரம்பலூர்,புதுக்கோட்டை,சிவகங்கை, விருதுநகர்,ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இருப்பினும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை;
அடுத்த 24 மணி நேரத்தில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் வடக்கு குஜராத் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Previous articleபேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி; இரக்கமின்றி செய்த சம்பவத்தால் மாணவி பலி
Next articleவைரக்கற்கள் ஒட்டப்பட்ட முக கவசம்;விலை எவ்வளவு தெரியுமா?