“பேன் இந்தியா ஸ்டாரோடு இணைவது உறுதி…” இயக்குனர் லிங்குசாமி வெளியிட்ட தகவல்!

0
85

“பேன் இந்தியா ஸ்டாரோடு இணைவது உறுதி…” இயக்குனர் லிங்குசாமி வெளியிட்ட தகவல்!

சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும்.

இந்த படத்தின் தோல்விக்குப் பின் இயக்குனர் லிங்குசாமி சில வருடங்கள் படமே இயக்காமல் இருக்கவேண்டிய சூழல் இருந்தது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் நடிக்க இருந்த படமும் ட்ராப் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் இயக்கிய சண்டக்கோழி 2 திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதையடுத்து தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள தி வாரியர் என்ற திரைப்படத்தை ராம் பொத்தினேனி என்ற தெலுங்கு ஹீரோவை வைத்து இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று வெளியாகி பரவலாக கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது வாரியர் படத்துக்குப் பின்னர் பேசியுள்ள இயக்குனர் லிங்குசாமி “அல்லு அர்ஜுன் உடனான படம் ட்ராப் செய்யப்படவில்லை. விரைவில் அவரை வைத்து படம் இயக்குவேன்” என உறுதியாக பேசியுள்ளார்.