மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 

0
469
#image_title

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு தொடர்பான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன.

இதையடுத்து இந்த வழக்கு இன்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா,  ஆகியோர் முன்பு அமர்வுக்கு வந்தது.   அப்போது வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதிகள் தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது எனவும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பான ஒன்றுதான்.  முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தமிழக அரசின் இந்த முடிவு சரியானது தான். என்று கூறினர்.

இதன்படி மின் இணைப்பு  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

 

Previous articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!
Next articleமூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here