வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31 வரை கால அவகாசம் தவறினால் ஊதியம் கிடையாது!
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 25 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் 100 நாள் வேலைத்திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சட்டம் ஒரு நிதி ஆண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கின்றது.
மேலும் 100 நாட்கள் வேலை தர அரசு தவறிய நாள் பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்கள் சம்பளத்தில் கால்பங்கும் மேலும் தாறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கான ஊதியம் 2 முறைகளில் வழங்கப்பட்டு வந்தது. அதில் ஒன்று வங்கி கணக்கில் அடிப்படையில் மற்றொன்று ஆதாரங்கள் கணக்கு அடிப்படையில் வங்கிக்கணக்கின் கீழ் பணியாளர்களின் அளித்த வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 2023 ஜனவரி 30 ஆம் தேதி அன்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 2023 பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊதியம் பெற ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதாரை இணைக்காவிட்டால் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பை மேற்கொண்டு இருக்க வேண்டும். ஒரு நபரின் 100 நாள் வேலை அட்டை வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் தொடர்பு படுத்தப்படும் இதற்கு சம்பந்தப்பட்ட நபர் தனது வங்கிக்கு சென்று அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 17ஆம் தேதி நிலவரப்படி நூறு நாள் வேலை பணியாளர்களின் இதனால் வரை 47 சதவீதம் பேர் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கவில்லை.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் இதனை மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் நாம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதாரங்களை கொண்டு பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களது இணைத்துக் கொள்ளவில்லை.
அதனால் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து இணைக்கப்பட்ட வங்கிகளை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் ஊதியம் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.