Gov Holiday: நமது தமிழகத்திற்கு அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று தான் டாஸ்மாக். கிட்டத்தட்ட பண்டிகை சமயங்களில் 600 கோடிக்கும் மேல் வருவாய் வந்துவிடும். அதேபோல வருடத்தில் தேர்தல் சமயத்தை தவிர்த்து கிட்டத்தட்ட குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, வள்ளலார் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுப்பு அளிக்கப்படும். அதேபோல இம்முறை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு தமிழகத்தில் உள்ள எந்த ஒரு டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர். மகாவீர் ஜெயந்தியானது இம்மாதம் பத்தாம் தேதி வர உள்ளது.
அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்த ஒரு டாஸ்மாக் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இயங்கும் பார் எதுவும் செயல்படக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது ரீதியான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார் என்றும் கூறியுள்ளனர். மகாவீர் ஜெயந்தியை “டிரை டே” வாக அனுசரிக்கப்பட்டு விடுப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்டு ஏதேனும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதேபோல பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் பார் வசதி உள்ளிட்டவைகளில் எது செயல்பட்டாலும் கட்டாயம் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் வரும் ஏப்ரல் பத்தாம் தேதியில் தமிழகத்தில் எந்த ஒரு டாஸ்மாக் மற்றும் பார்களும் இயங்காது. மேற்கொண்டு அந்த நாளை டிரை டேவாக அனுசரிக்கவும்படும்.