State

பெரம்பலூரில் மதுபானக் கடை ஊழியர்களிடம் ரூ.3.50 லட்சம் பணம் பறிப்பு!

பெரம்பலூர் அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 45) பணியாற்றி வருகிறார்.
இவருக்கு உதவியாளராக பாடாலூர் பெரியார் நகரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு மதுபானம் விற்பனை செய்த பணம் ரூ.3.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு மணிவண்ணனும், சுரேஷும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இதையடுத்து பாடலூர் காவல் நிலையத்தில் மணிவண்ணன் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment