லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!!

Photo of author

By Rupa

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!!

Rupa

List is ready ...Pension cut for them!! Annamalai threatening the police!!

லிஸ்ட் ரெடி …இவர்களுக்கு பென்ஷன் கட்!! காவல்துறையை மிரட்டும் அண்ணாமலை!!

பாஜக அண்ணாமலை சர்ச்சைக்குள் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளார். இவர் ஐபிஎஸ் ஆக இருந்ததையே மறந்து கட்சிக்குள் மூழ்கியுள்ளார். தற்பொழுது நடைபெற்ற பொதுமக்கள் கூட்டத்தில் காவல்துறையையே மிரட்டி உள்ளார். இவர் மேடையில் பேசுகையில், இரண்டு ஆண்டுகள் கழித்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். அப்பொழுது எங்கள் மீது யாரெல்லாம் கை வைத்தீர்களோ உங்கள் மீது எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கை வந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

நீங்கள் ஓய்வு பெறும் வயதில் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. எங்கள் மீது கை வைத்தவர்கள் தினந்தோறும், ஏன் இந்த காக்கி சட்டையை போட்டோம் என்று நீங்கள் எண்ணினால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. இவ்வாறு அவர் பேசியுள்ளார். இவர் கூறுவதைப் பார்த்தால் பாஜக மீது நடவடிக்கை எடுத்த போலீசாராய் எல்லாம்  வரிசைப்படுத்தி அவர்களின் மேல் குற்றங்களை சுமத்தி நடவடிக்கை எடுப்பது, ஓய்வூதியம் கிடைக்காமல் செய்வதும், அவர்களை பல வழக்குகளில் சிக்க வைத்து வேலை பளு கொடுப்பது என பழிவாங்குவோம் என சொல்லாமல் சொல்லி உள்ளார். காவல்துறையினரை மிரட்டி, அவர்களின் நடவடிக்கை எடுக்காத வகையில் பாஜக அண்ணாமலை கூறுவது பல குற்றங்களுக்கு முன்வகுக்கும். இது பெரிதும் கண்டிக்கத்தக்கது என பலர் கூறுகின்றனர்.