போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

தமிழகம் முழுவதும் அதிமுக–பாஜக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், தற்போது பாஜக–அதிமுக கூட்டணியில் குறைந்தது 56 இடங்கள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் மத்திய உளவுத்துறை தீவிரமாக பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணித்து இருக்கிறதாம்.

இதில் முதல் 5 இடங்கள் எவை என்றும், வேட்பாளர் யார் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இதில் முதல் இடத்தில் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி பகுதி இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதி ஏறத்தாள பாஜகவிற்கு ஒதுக்குவது உறுதியாகி இருக்கிறது. இந்த தொகுதிக்கு பாஜகவில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, பாஜகவில் நீண்ட அனுபவம் கொண்ட அக்கட்சியின் மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரன், மாநில இளைஞர் அணி தலைவர் சூர்யா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் தான் சமீபத்தில் பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பைஜயந்த் பாண்டா, வேளச்சேரியில் உள்ள டால்பின் ஸ்ரீதரன் வீட்டிற்கு சென்று இருந்தார். உடன் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இது குறித்து அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டதாவது, டால்பின் ஸ்ரீதரன் கடந்த பல ஆண்டுகளாக வேளச்சேரியில் தீவிர கட்சி பணி செய்து வருகிறார். கட்சி மேலிடமும் அவருக்கே சீட் என்பதை உறுதி செய்து இருக்கிறது. அதற்கான அடித்தளம் தான் சட்டமன்ற பொறுப்பாளர் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றது என கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் 40 ஆண்டுகாலம் நீண்ட அனுபவம் கொண்டவர் என்ற முறையில், இந்த முறை பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள வேளச்சேரி தொகுதி டால்பின் ஸ்ரீதரனுக்கு ஒதுக்கப்பட இருக்கிறதாம்.

அடுத்த பதிவில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள மைலாப்பூர், மதுரை வடக்கு, கிணத்துக்கடவு, கோவை வடக்கு போன்ற பகுதிகளில் யாருக்கு கட்சி சார்பில் வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.