லிஸ்ட் ரெடி.. அடுத்த சட்ட ஒழுங்கு டிஜிபி இவர் தானா!! ஸ்டாலினின் கைப்புள்ளையாக பதவி வகிக்கப்போவர் யார்??
தமிழகத்தில் இந்த ஆண்டு பெறும் பதவிகளில் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் யார் இதற்கு தகுதியானவர்களாக அமரப் போகிறார்கள் என்பதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது அந்த வகையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபுவின் பதவி காலமானது வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளதால் இவருக்கு அடுத்து யார் வர உள்ளார் என்று காவல்துறை மற்றும் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பல பொறுப்புகளின் தலைவர்களை அதிரடியாக மாற்றம் செய்ததை அடுத்து தற்பொழுது தலைமை செயலாளர் சட்டம் ஒழுங்கு டிஜிபி என அடுத்தடுத்த பொறுப்புகளில் யாரை அமர வைக்கப் போகிறார் என்பதில் அதிக சந்தேகம் இருந்துள்ளது.
இவ்வாறு சட்ட ஒழுங்கு டிஜிபி லிஸ்டில் ஸ்டாலின் இடம் மூன்று பேர் உள்ளதாகவும் அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பேரில் யாரோ ஒருவர்தான் கட்டாயம் தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி யாக பொறுப்பேற்கப் போகிறார் எனவும் கூறி வருகின்றனர்.
அதில் முதலாவதாக இருப்பவர் முதல்வருக்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான சங்கர் ஜிவால் , இவரை அடுத்து இரண்டாவதாக இருப்பது முன்னாள் கமிஷனர் மற்றும் காவலர் வீட்டு வசதி வாரியம் வேளாண் இயக்குனர் ஆன ஏவிகே விஸ்வநாதன் இதில் மூன்றாவது இடத்தில் இருப்பது தற்பொழுது ஊர் காவல் படை தலைவராக இருக்கும் பிர்ஜ் கிஷோர் ரவி.
இவர்களில் பிகே ரவிக்கு அதிக அளவு வாய்ப்பு கிடையாது என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இவர் தீயணைப்பு துறை இயக்குனராக இருந்த நேரத்தில் சில காரணங்களினால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது இவர் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்க வாய்ப்பு இல்லை எனக் கூறுகின்றனர்.
அதிகப்படியான சாத்திய கூறுகள் முதல்வருக்கு பிரியமான சங்கர் ஜிவால்தான் எனக் கூறுகின்றனர். ஆனால் இவர் தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் சந்தேகிக்க படியும் உள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த ஏகே விஸ்வநாத் கூட சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பு ஏற்கலாம் என கூறுகின்றனர்.
இந்த வருடம் தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டு பொறுப்புகளில் யாரை முதல்வர் அமர்த்த போகிறார் என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் முதல்வருக்கு மிகவும் ஆதரவாக இருப்பவர்களே நியமிக்கப்படுவர் என்றும் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.இந்த லிஸ்டில் இருக்கும் மூவரும் நேர்மையானவர்கள் என்றாலும் அதிக அளவு முதல்வருக்கு வலது கையாக செயல்பட போகும் நபரை தான் தேர்வு செய்வார் என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.