நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

0
237
#image_title

நடப்பு ஐபிஎல் தொடரில் லிட்டன் தாஸ் விலகல்!! அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிரிடியாக ஆடக்கூடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் தனிப்பட்ட காரணங்களுக்கு சொந்த நாடு திரும்புகிறார். இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

லிட்டன் தாஸ் அவருக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஜேசன் சார்லஸ் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. அதிரடி ஆட்டக்காரரான ஜேசன் சார்லஸ் சர்வதேச போட்டிகளில் அதிவேக சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார்.

வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்க்கு பதிலாக ஜேசன் சார்லஸ் அவர்கள் 50 லட்சம் ரூபாய்க்கு நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் பெற்று 6 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Previous articleஉலக வங்கியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த அஜய் பங்கா தேர்வு!! யாரு இந்த அஜய் பங்கா!!
Next articleநான் இன்னும் சாகவில்லை நண்பா!! ரசிகரின் கேள்விக்கா பதில் அளித்த இயக்குநர் செல்வராகவன்!!