மத்திய அரசு வழங்கும் ரூ.4 லட்சம் கடன் உதவி! ஆதார் அட்டை இருந்தால் போதும்?

Photo of author

By Rupa

மத்திய அரசு வழங்கும் ரூ.4 லட்சம் கடன் உதவி! ஆதார் அட்டை இருந்தால் போதும்?

Rupa

Loan assistance of Rs. 4 lakh provided by the central government! Is Aadhaar card enough?

மத்திய அரசு வழங்கும் ரூ.4 லட்சம் கடன் உதவி! ஆதார் அட்டை இருந்தால் போதும்?

ஆதார் அட்டை இருந்தால் போதும் மத்திய அரசு இலட்சக்கணக்கில் கடன் தருகிறது என்று பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளது. அதுமட்டுமின்றி பலரின் தொலைபேசி எண்ணிற்கும் மத்திய அரசு வழங்கும் கடனுதவி என்று ஸ்கேம் குறுஞ்செய்திகள் வருகிறது. இதனை பலரும் பார்த்து ஏமாற்றமே அடைகின்றனர். ஏனென்றால் மத்திய அரசு அவ்வாறான தகவல் எதையும் வெளியிடவில்லை.

இது குறித்து பி ஐ பி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. சமீபத்தில் மட்டும் ஆதார் அட்டை வைத்திருந்தால் மத்திய அரசு கடன் வழங்க இருப்பதாக பிரதமரின் புகைப்படத்துடன் பல விளம்பரங்கள் வருகிறது. இது பொய்யான தகவல் என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பி ஐ பி விளக்கம் அளித்துள்ளது. பி ஐ பி எல் என்பது உண்மையை கண்டறியும் ஓர் குழு அமைப்பு ஆகும்.

இதன் இணையதள பக்கத்தில், பொய்யான தகவல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவர். அந்த வகையில் மோடியின் படத்தோடு ஆதார் அட்டையை இணைத்து கடன் வழங்குவதாக கூறும் செய்தி பொய்யானது எனக் கூறியுள்ளனர்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுபோல தகவல் வெளிவந்ததாக தெரிவித்துள்ளனர். அச்சமயத்திலும் இக்குழுவானது கடன் உதவி வழங்கும் திட்டம் என்பது முற்றிலும் பொய் என கூறியது. அதேபோல தற்பொழுதும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் அவ்வாறான பொய் தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.