உள்ளாட்சி தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! களைகட்ட போகும் தேர்தல் திருவிழா

உள்ளாட்சி தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! களைகட்ட போகும் தேர்தல் திருவிழா

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி உத்தரவிட்டது. அதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது தாமதமாகி வருகிறது.தேர்தலை எதிர்கொள்ள மாநில அரசு அச்சப்படுகிறது என்று எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் பலமுறை உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளியான சில தினங்களில் மாநிலத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Comment