உச்ச நீதிமன்றத்தின் கறார் உத்தரவு! களத்தில் இறங்கும் தமிழக அரசு!

0
164

இந்த வருடம் முடிவதற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருக்கின்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆகவே தேர்தல் நடக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் நிர்வாகம் செய்வார்கள் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்களுடைய பதவிக்காலம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. அச்சமயம் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை இந்த தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இடையில் விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி உட்பட தேர்தல் நடத்தாமல் விடுபட்டு இருக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். இனியும் கால அவகாசம் வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் கறாறாக தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இந்த வருட இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்திருக்கின்றார். உள்ளாட்சித் தேர்தலை இந்த வருடம் முடிவதற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முதலமைச்சரை எங்களுடைய துறைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். ஆகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல விடுபட்டிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்திருக்கின்றார்.

சென்னையின் புறநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் வாரியத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் கே. என். நேரு இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Previous articleஇந்த மாதம் மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கா!! அப்போ இத பாருங்க!!
Next articleமேகதாது அணையை கட்டுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது! புதிய குண்டை போட்ட கர்நாடக அரசு!