உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த தேர்தல் நடப்பது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக விருப்ப மனுக்களை ஒரு பக்கம் பெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் இரண்டு கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன என்றும் இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அல்லது தள்ளிப்போட மறைமுகமாக முயற்சித்து வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தற்போது சந்திப்பது சரியாக இருக்காது என்று இரண்டு கட்சிகளும் நினைப்பதாகவும், மேலும் இந்த தேர்தலில் தொகுதிகளை பிரித்து கொடுக்கும்போது கூட்டணி கட்சிகளுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அது சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் இரு கட்சிகளும் கருதுவதாகவும் தெரிகிறது
எனவே வழக்கு அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க இரண்டு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கை யாராவது பதிவு செய்து தேர்தலை நடத்த விடாமல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்