இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Photo of author

By Parthipan K

இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Parthipan K

Local holiday here! The order issued by the District Collector!

இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும்  அனைத்திற்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடுமுறை அனைத்தும் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு  இம்மாதம் 13 ஆம் தேதி பொது தேர்வு நடைபெற உள்ளது.

இன்று 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொதுவாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை மற்றும் தலைவர்களின் பிறந்தநாள் என முக்கிய தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம் தான். அந்த வகையில் புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக சனிக்கிழமை இயங்கும் அலுவலகங்களுக்கு அதற்கு அடுத்த நாள் அதாவது ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக  அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.