நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலானது சென்ற மாதம் 5 மாநிலங்களில் நடந்து முடிந்தது.அதில் மேற்கு வங்க முதல்வராக மம்தா மூன்றாவது முறை வெற்றி வாகை சூடினார்.அதனையடுத்து தற்போது கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிக அளவு பரவ ஆரம்பித்துள்ளது.அதனால்கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களாக டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு உள்ளது அதனையடுத்து தற்போது மேற்கு வங்கம் அந்த பட்டியலில் உள்ளது.அதனால் அம்மாநில முதல்வர் மம்தா புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார்.இனி அலுவலங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.அதனையடுத்து நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளார்.மதம் சார்ந்த கூட்டங்கள்,அரசியல் கூடங்களுக்கு தடை விதித்துள்ளார்.இனி காய்கறி கடைகள்,சந்தைகளுக்கு காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே நேர அவகாசம் தந்துள்ளார்.
பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி அளித்துள்ளார்.மெட்ரோ உள்ளிட்ட மாநில போக்குவரத்து இரயில்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அதுமட்டுமின்றி மக்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளிகளை பின்பற்றியும் நடக்க வேண்டும் என கூறியுள்ளார்.அதேபோல வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளார்.இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மேற்குவங்கத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பல கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் இன்று நரேந்திரமோடி சுகாதாரதுறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.அதில் இந்தியாவில் முழு ஊரடங்கு போடுவதற்கான நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என வெளி வட்டரங்கள் பேசி வருகின்றனர்.