ஊரக உள்ளாட்சி தேர்தல் 1 மணி நிலவரம்?

0
132

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய விடிய நடைபெற்றது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இதுவரை , 5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணி 2327 இடங்களிலும், அதிமுக  கூட்டணி 2134 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 521 பதவிகளை கைப்பற்றின.

இதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 515 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக கூட்டணி 241இடங்களிலும், திமுக கூட்டணி 267 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Previous articleசூர்யா படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்?
Next articleசென்னையில் பரபரப்பு!!! போண்டா சாப்பிட்ட பெண் மரணம்?