அரசியல் வாதிகளுக்கு செம லாக்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதன் 6 ஆம் தேதி நடக்கயிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் பதவியை தக்க வைத்துக்கொள்ள மக்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும் பலவகை பரிசு பொருட்ககளை அரசியல் கட்சிகள் வழங்கி தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளை சேகரிக்க நினைகின்றனர்.இக்காரணத்தினால் தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை வைத்து கண்காணித்து வருகிறது.அவர்கள் கண்காணித்ததில் சென்ற வாரம் 5000 யிற்கும் மேற்பட்ட கம்பளி,டம்பளர் போன்ற பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து செல்போன்களிலுள்ள ஆன்லைன் வங்கி மூலம் பணம் அனுப்ப படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல்கள் வந்தன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் புதிய கண்காணிப்பாளர் டீம் வைத்து அரசியல் கட்சியின் தலைவர்களின் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்து வருகின்றனர்.இவ்வளவு கட்டுப்பாடுகளை போட்டும் சில அரசியல் வாதிகள் பூத் ஸ்லீப் மூலம் தங்களது கட்சின் சின்னத்தை போட்டு அதை மக்களுக்கு கொடுக்கும் போது பணத்தையும் வைத்து கொடுத்துவிடுகின்றனர்.இதனையெல்லாம் தடுக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் பூத் ச்லீப்களில் இனி புகைப்படங்கள் அட்சிடப்பட்டு வராது அதே சமயம் பூத் ச்லீப்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பிரித்து அரசு ஊழியர்களே விநியோகம் செய்வார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் புதிய கோட்பாடுகளை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய கட்டுபாடுகள் அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.இந்த கட்டுபாடுகள் மூலம் அரசியல் வாதிகள் மக்களுக்கு லஞ்சமாக தரும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்காமல் இருப்பதற்கு ஒரு வழிமுறையாக இருக்கும்.புதிய அறிவிப்பிற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.